மேலும் செய்திகள்
நவராத்திரி சிறப்பு வழிபாடு
29-Sep-2025
கிருஷ்ணராயபுரம்;வயலுார் பஞ்., கோடங்கிப்பட்டி கிராமத்தில், பவதியம்மன், பாம்பாலம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமம், கோடங்கிப்பட்டியில் பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி, ஆண்டுதோறும், 10 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று இரவு, நவராத்திரி சிறப்பு வழிபாடு முன்னிட்டு, கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து பகவதியம்மன், பாம்பலம்மன், பரிவார சுவாமிகளான விநாயகர், தட்சிணமூர்த்தி, மகாலட்சுமி, முருகன், துர்கை, நவகிரங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
29-Sep-2025