உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நவராத்திரி மூன்றாவது நாள் விழா: கரூரில் கோலாகலம்

நவராத்திரி மூன்றாவது நாள் விழா: கரூரில் கோலாகலம்

கரூர்: நவராத்திரி மூன்றாவது நாளையொட்டி, கரூர் கோவில்களில் உற்-சவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ விழா கடந்த, 3ல் தொடங்கி-யது. நேற்று இரவு மூன்றாவது நாளையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் ஸ்ரீ சேஷ சயன வேடத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மனுக்கு, கிளியுடன் கூடிய சவுரி முடி அலங்காரம், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் அம்மனுக்கு தன்வந்திரி அலங்காரம் செய்-யப்பட்டிருந்தது. மேலும், கரூர் கச்சேரி பிள்ளையார் கோவிலில் நவராத்திரி, மூன்றாவது நாளையொட்டி கொலு பொம்மைக-ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ