மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
21-Dec-2024
கரூர், டிச. 24-தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், தான்தோன்றிமலை ஒன்றிய கிளை சார்பில், ஒன்றிய தலைவர் சகாயமேரி தலைமையில், பஞ்., யூனியன் அலுவலகம் முன், நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், அரசாணை எண், 91ஐ ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம், 6,750 ரூபாய் அகவிலைப்படி வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்துடன், சத்துணவு திட்டத்தை இணைக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர்கள் பிரவீணா, ஜானகி, ஒன்றிய செயலாளர் பிலோமினாள், வட்ட கிளை தலைவர் பிரேம், உள்பட பலர் பங்கேற்றனர். * பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் செல்வி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு திட்டத்தில் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்றனர். மேலும், நீண்ட காலமாக காலியாக உள்ள இடங்களில் ஓராண்டு வரை, 3,000 ரூபாய் ஊதியம் என்ற திட்டத்தில், சுய உதவிக் குழு பெண்களை பணி அமர்த்தியுள்ள தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக இந்த அரசாணையில் மாற்றம் செய்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட இணை செயலாளர் ஜெயமேரி, ஒன்றிய செயலாளர் சத்யா, ஒன்றிய பொருளாளர் சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணராயபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தமிழரசி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, கிருஷ்ணராயபுரம் வட்டக்கிளை தலைவர் முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, கரூர் மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், ஒன்றிய பொருளாளர் சாந்தி, உள்பட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
21-Dec-2024