உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரிசி ஆலையில் அதிகாரிகள் சோதனை

அரிசி ஆலையில் அதிகாரிகள் சோதனை

கரூர்:தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரூர் நகர பகுதியில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை திருச்சி எஸ்.பி., முத்தமிழ் தலைமையில், டி.எஸ்.பி., வின்சென்ட், கரூர் வட்ட வழங்கல் அலுவலர் கவிதா ஆகியோர் அடங்கிய கூட்டுத் தணிக்கை குழுவினர் சோதனை நடத்தினர்.இதில் கரூர் நகர பகுதியில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை மொத்தமாக விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகள், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் அளவுகளையும், விற்பனை பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். அங்கிருந்த அரிசி மூட்டைகளின் தரம் குறித்தும், முறையான ஆவணங்களுடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரிசி அரவை ஆலைக்கு சென்ற அதிகாரிகள் குழுவினர், ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மற்றும் அரிசி மூட்டைகளை பார்வையிட்டனர். ரேஷன் அரிசி ஏதேனும் கலப்படம் செய்யப்படுகிறதா அல்லது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் தணிக்கை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ