உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடுப்பு சுவர் கட்ட மக்கள் வலியுறுத்தல்

தடுப்பு சுவர் கட்ட மக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம், பிடாரி கோவில் சாலை புதிய வாய்க்கால் பாலத்தின் அருகில், தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பிடாரி அம்மன் கோவில் அருகில், நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டப்பட்-டுள்ளது. பாலம் வழியாக மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். இந்த நிலையில், பாலத்தின் அருகில் பிடாரி கோவில் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலை பிரதான பாலம் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.கோவில் சாலை வழியாக வரும் போது, பிரதான சாலை செங்-குத்தாக இருப்பதால் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் தடு-மாறி கீழே விழும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப் படுகின்றனர். ஆகையால் புதிய பாலம் கட்டப்பட்டுள்ள இடத்தின் அருகில், பிடாரி கோவில் சாலை கீழ்புறம் தடுப்பு சுவர் கட்டி, வாகனங்கள் சீராக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை