கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலை வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதி, இந்த சாலையில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, மின்வாரிய அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்கள், பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.சாலையில் கால்வாய் இல்லாததால், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்கி விடுகிறது.சில நாட்களில், தேங்கிய கழிவுநீர் நிரம்புவதால் சாலையில் செல்லும் அவல நிலை உள்ளது. மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.