உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பா.ம.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பா.ம.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கரூர், பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியதால், கரூரில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அன்புமணியை பா.ம.க., வில் இருந்து நீக்கி, ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்து நேற்று, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயலர் சுரேஷ் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர். மாவட்ட அமைப்பு செயலர் குணசீலன், துணை செயலர்கள் சதீஷ், வரதன், கரூர் நகர செயலர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ