உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் பஸ் சிறை பிடிப்பு

தனியார் பஸ் சிறை பிடிப்பு

தனியார் பஸ் சிறை பிடிப்புபள்ளிப்பாளையம், நவ. 30-ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழித்தடத்தில், பள்ளிப்பாளையம் அருகே ஐந்துபனை பஸ் ஸ்டாப் உள்ளது. தனியார் பஸ்சில் ஏறி, ஐந்துபனை பஸ் ஸ்டாப்புக்கு டிக்கெட் கேட்டால், 'பஸ் அங்கு நிற்காது' என, கண்டக்டர் தெரிவித்துள்ளார். இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, 6:30 மணிக்கு ஐந்துபனை பஸ் ஸ்டாப்பில் கூடினர். தொடர்ந்து, அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை மறித்து சிறைபிடித்தனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார், ஐந்துபனை பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை