உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவலர் தின மினி மாரத்தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

காவலர் தின மினி மாரத்தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

குளித்தலை :குளித்தலை சுங்ககேட்டில், நேற்று காவலர் தினத்தை முன்னிட்டு, குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மினி மாரத்தான் போட்டி நடந்தது.மினி மாரத்தான் போட்டியை, டி.எஸ்.பி., செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு 3 கி.மீ., தொலைவும், பெரியவர்களுக்கு 6 கி.மீ., தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தனித்தனியாக நான்கு பிரிவுகளாக நடந்த போட்டியில், 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மெடல், பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் மெடல்கள் வழங்கப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ஜெயபாண்டி, அசோகன், எஸ்.ஐ.,க்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி