உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உயர் கல்வியில் சேராத மாணவ, மாணவியருக்கு உயர்வுக்கு படி முகாம்

உயர் கல்வியில் சேராத மாணவ, மாணவியருக்கு உயர்வுக்கு படி முகாம்

கரூர், பிளஸ் 2 முடித்து, உயர் கல்வியில் சேராத மாணவ, மாணவியருக்கு உயர்வுக்கு படி இரண்டாம் கட்ட முகாம் வரும், 9ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் வளாகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகாமையில் உள்ள, மாவட்ட பஞ்சாயத்து அலுவலக கூட்டரங்கத்தில், உயர்வுக்கு படி முகாம் வரும், 9ல் நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2024---25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேராத மாணவர்களுக்கு, உயர்கல்வி பெறுதல் சார்ந்து வழிகாட்டுவதற்காக உயர்வுக்கு படி முகாம் இரண்டாம் கட்டமாக நடக்கிறது.இங்கு கலை அறிவியல் பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், வேளாண், வேளாண் சார்ந்த படிப்பு, பல்வகை தொழில்நுட்ப படிப்பு, தொழிற்பயிற்சி மைய படிப்பு, ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் படிப்பு போன்ற விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர்.கல்லுாரிகளில் நேரடி சேர்க்கை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் உயர்கல்வி பயில வங்கிக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள், உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்பு போன்றவை குறித்த தகவல்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து காட்சி அரங்குகள் அமைக்க உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !