உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தொழிற்சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்கரூர், டிச. 11-தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் கிளை சார்பில், தலைவர் முருகவேல் தலைமையில், மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மின் வினியோக கம்பிகளை, தனியாருக்கு விடுவதை எதிர்த்து போராடி வரும் சண்டிகர், உத்தரபிரதேச மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மின்சார வாரியங்களை தனியாருக்கு விடும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் தனபால், நிர்வாகிகள் விஜயகுமார், ரவிச்சந்திரன், நெடுமாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை