மேலும் செய்திகள்
கரூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
26-Feb-2025
கரூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, டி.ஆர்.இ.யு., சார்பில், கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது,கரூர் டி.ஆர்.இ.யு., கிளை சார்பில், தலைவர் முருகதாஸ் தலைமையில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், எட்டாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரயில்வே துறையில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி மாற்றம் கேட்டுள்ள, ரயில்வே தொழிலாளர்களுக்கு இடமாற்றம் உத்தரவை வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, டி.ஏ., வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், சேலம் கோட்ட உதவி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் நல்லமுத்து, மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Feb-2025