உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், மாவட்ட கவுரவ தலைவர் ராஜேந்திரன் தலைமையில், திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மதுரை மண்டல போக்குவரத்து கழகம், ஆரப்பாளையம் பணிமனை டிரைவர் மீது தாக்குதல் நடத்திய, அதிகாரியை கண்டித்தும், அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி