மேலும் செய்திகள்
அரவக்குறிச்சியில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்
16-Apr-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்தில், அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் 20 ஊராட்சிகள் உள்ளன. இவற்றை சுற்றி நுாற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உயிரிழந்தோரின் உடல்களை தகனம் செய்ய, மின் மயான வசதி இல்லை. இதனால், 40 கி.மீ., தொலைவில் உள்ள கரூருக்கு கொண்டு சென்று, அங்குள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டி உள்ளது.இதற்கு பல மணி நேரம் ஆவதால், இறந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரவக்குறிச்சி பகுதியை மையமாக கொண்டு அரசு மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
16-Apr-2025