உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கரூர்:கரூர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கியது. வரும், 31 வரை அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நோய் கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்பளங்களை ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், சாணம், பால் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. இந்த நோயை தடுக்கும் வகையில், அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில், 75 குழுக்கள் ஈடுபடுகின்றன.தொடர்ந்து விடுபட்ட கால்நடைகளுக்கு ஆக., 1 முதல் 10- வரை முகாம் நடக்கிறது. விவசாயிகள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளில், தவறாது கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ