மேலும் செய்திகள்
மாயனுார் கதவணைக்கு 15,264 கனஅடி நீர் வரத்து
18-Sep-2025
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை மழை பெய்தது.அரபிக்கடல் பகுதியில் நிலவும், குறைந்தழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழைளவு விபரம் (மி.மி.,) குளித்தலை, 2.60, தோகைமலை, 46.80, பஞ்-சப்பட்டி, 3, கடவூர், 5 மி.மீ., மழை பெய்தது.இந்நிலையில் நேற்று மாலை, 4:00 முதல், 4:30 மணி வரை கரூர் டவுன், திருமாநிலையூர், சுங்ககேட், செல்லாண்டி-பாளையம், சுக்காலியூர், காந்தி கிராமம், பசுபதி பாளையம், வெங்கமேடு, தான்தோன்றி மலை, திருகாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. * க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.01 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
18-Sep-2025