உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழையால் செழிப்பான மரவள்ளிக்கிழங்கு செடிகள்

மழையால் செழிப்பான மரவள்ளிக்கிழங்கு செடிகள்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், பாம்பன்பட்டி, பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி, திருமேனியூர், சிவாயம், வரகூர், மேட்டுப்பட்டி, புதுப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், கணக் கம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர்.மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கிராமங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மரவள்ளிக்கிழங்கு செடிகள் செழிப்பாக பசுமையாக வளர்ந்து வருகிறது. கிழங்கு செடிகளுக்கு மழைநீர் கிடைப்பதால் செடிகள் நன்கு வளர்ச்சி கண்டுவருகிறது. தற்போது அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கு கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையாவதால், ஓரளவு வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !