உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெயர் மாறியும், மாறாத போர்டுகள்

பெயர் மாறியும், மாறாத போர்டுகள்

கரூர்: கரூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு, மூன்றாண்டு ஆன நிலையில் இனாம் கரூர், தான்தோன்றிமலை நகராட்சி என்ற பழைய பெயரில் தெருவில் உள்ள, போர்டுகள் உள்ளதை, அதிகா-ரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.கடந்த, 2011 ல் அக்டோபர் மாதம், கரூர் நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், இனாம் கரூர், தான்தோன்றிமலை நக-ராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து இணைக்கப்-பட்டன. இதன் அடிப்படையில், விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. அப்போது, 80 ஆண்டுகால, கரூர் நகராட்சி வரலாற்றில், முதன் முறையாக அ.தி.மு.க., வை சேர்ந்த செல்வராஜ், நேரிடையாக தலைவராக வெற்றி பெற்று, ஐந்-தாண்டு பதவியில் இருந்தார்.பின்னர் 2016-21ல் கரூர் நகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட நிலையில், கரூர் நக-ராட்சி, மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு தேர்தல் நடந்-தது. அதில், தி.மு.க., வை சேர்ந்த கவிதா வெற்றி பெற்று மேய-ராக பதவியில் உள்ளார்.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இனாம் கரூர், தான் தோன்றிமலை பகுதியில் நகராட்சி என்ற பெயரில் தெருக்-களின் பெயர்களில் வைக்கப்பட்ட போர்டுகள் இன்னமும் மாற்-றப்படாமல் உள்ளன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள கரூர் மாநகராட்சி கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, பழைய நகராட்சி பெயரில் உள்ள, போர்டுகளை மாற்ற அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை