மேலும் செய்திகள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
12-Mar-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் திருப்பணி நடத்துவது குறித்து, நேற்று முன்தினம் மாலை, ஹிந்து சமய அறநிலையத்துறையின், திருப்பூர் மண்டல இணை ஆணையர் ரத்தி-னவேல் பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்-தது. கடந்த, 10 மாதங்களுக்கு முன் அய்யர் மலையின் உச்சியில் உள்ள சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், அம்மன், ராஜலிங்கம் சுவாமிகள் தவிர, மற்ற பரிவார மூர்த்திகளுக்கு திருப்-பணி நடத்த பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, மலைய-டிவாரத்தில் உள்ள கம்பத்தடி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பொன்னிடும் பாறை, நால்வர் சன்னதி, வலம்புரி விநாயகர் சன்-னதி, முருகன் சன்னதி ஆகியவற்றிற்கு திருப்பணி செய்வதற்காக, பாலாலயம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது.தொடர்ந்து, வரும் சித்திரை மாதம் அய்யர் மலையில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதால், தேரோட்டம் முடிந்த பின் மலை உச்சியில் உள்ள சுரும்பார் குழலி அம்மன், ரத்தினகிரீஸ்வரர் மற்றும் ராஜலிங்கம் சுவாமிகளுக்கு பாலாலயம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆய்வாளர் மாணிக்கசுந்தரம், செயல் அலு-வலர் தங்கராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
12-Mar-2025