சின்னதாராபுரம் பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை
கரூர்: சின்னதாராபுரம் பிரிவு சாலையில், ரவுண்டானா அமைக்க வேண்டும்.கரூர்-கோவை நெடுஞ்சாலையில் சின்னதாராபுரம் பிரிவு சாலை உள்ளது. இதன் வழியாக தினமும் கோவை, தாராபுரம், பொள்-ளாச்சி, பழநி உள்பட பல்வேறு நகரங்களுக்கு வாகனங்கள் அதிகம் செல்கின்றன. சின்னதாராபுரத்தில் இருந்து வரும் பஸ்கள், பிரிவு சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அப்பகுதியில் விபத்தை தடுப்பதற்கு, ரவுண்டானா அமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இப்பகுதியில் பள்ளி, அரசு அலுவலகங்கள் இருப்பதால் வாக-னங்களில் பலர் செல்கின்றனர். அவ்வப்போது, பிரிவு சாலையில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்-களில் இரு சக்கர வாகன ஓட்டிகள், பிரிவு சாலை கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். எனவே, ரவுண்டானா அமைத்து பிரச்-னைக்கு தீர்வு காண வேண்டும்.