மேலும் செய்திகள்
தொண்டிக்கு தேவை வாரச்சந்தை வசதி
08-Oct-2026
குளித்தலை; குளித்தலை நகராட்சியில், வெள்ளிக்கிழமை தோறும் காவிரி நகர், அண்ணா நகர், சிறுவர் பூங்கா உழவர் சந்தை புறவழிச்சாலையில், காய்கறி, பழங்கள், கீரை வகைகள், பலகார கடைகள் இயங்கி வருகின்றன.இதில், அண்ணா நகர், காவிரி நகர் பகுதியில் அரசு, தனியார் வங்கிகள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. வாரச்சந்தை நாளில், வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், பொதுமக்கள் வாகனங்களில் சென்றுவர கடும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதியும், வியாபாரிகள் நலன் கருதியும், வாரச்சந்தையை முறைப்படுத்தி, கடம்பன் துறை பகுதியில் அல்லது கடம்பவனேஸ்வரர் கோவில் கிழக்கு மற்றும் தெற்கு வீதியில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
08-Oct-2026