உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழைநீர் வடிகாலில் குப்பை சரி செய்ய வேண்டுகோள்

மழைநீர் வடிகாலில் குப்பை சரி செய்ய வேண்டுகோள்

கரூர் : கரூர் அருகில், சுக்காலியூர் சாலையில் மழைநீர் வடிகாலில், குப்பை குவிந்துள்ளது.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூரில் சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் செல்கிறது. தற்போது கால்வாயில் ஏராளமான குப்பை தேங்கி கிடக்கிறது. மழை பெய்யும் பொது, வடிகால் கால்வாய் நிரம்பி, சாலையில் வெள்ள நீர் ஓடுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். மழைநீர் வடிகால் கால்வாயை, துார் வாரி சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.A


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ