உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

குளித்தலை:குளித்தலை அரசு போக்குவரத்து பணிமனையில், நடத்துனர் கிருஷ்ணனுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.பணிமனை கிளை மேலாளர் மணிவேல் தலைமை வகித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து நடந்த விழாவிற்கு தொ.மு.ச., கிளை செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். குளித்தலை தி.மு.க.. எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்றார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மற்றும் தொ.மு.க., பொறுப்பாளர்கள் பாலு, மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் நடத்துனர்கள் வெங்கடாஜலபதி, சிதம்பரம் ஆகியோருக்கும் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிகளில் பணி ஓய்வு பெற்ற குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி