உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

குளித்தலை, குளித்தலை அருகே, அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., அ.உடையப்பட்டியில், இரண்டு போக விளைச்சலுக்கு, தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம், மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் பெற்று வந்தனர். இந்தாண்டு கழுகூர் பஞ்.. மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர்.தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இந்தாண்டு கழுகூர் பஞ்.,ல் அமைக்கவில்லை. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை தங்களுடைய வீடுகளில் சேமித்து வைத்துள்ளனர்.மேலும் கழுகூர் பகுதியில், தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி, வேளாண்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுவரை, கொள்முதல் நிலையம் அமைக்காததால், கழுகூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை அ.உடையாபட்டி பஸ் நிறுத்தத்தில், நேற்று டிராக்டரில் நெற்களை கொண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், வேளாண்மை துறை அலுவலர்களை அழைத்து, கழுகூரில் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தோகைமலை போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.இதனால் குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி