மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை உறவினர்கள் மறியல்
15-Oct-2025
குளித்தலை :விபத்தை ஏற்படுத்திய மண்டல துணை தாசில்தார் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சடலத்துடன் உறிவனர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தேவர்மலை பஞ்., சீத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 30, கூலி வேலை செய்து வந்தார். கடந்த 30ம் தேதி பொசியம்பட்டியில் இருந்து, வாழ்வாரமங்கலம் தண்ணீர் பந்தல் மேடு அருகே, நண்பர் மனோஜூடன் பைக்கில் சென்றார். மனோஜ் பைக்கை ஓட்டினார்.மாலை 5:00 மணியளவில் பாளையம்- திருச்சி மெயின் ரோட்டில், கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணிபுரியும் உதயகுமார், காரை வேகமாக ஓட்டி வந்து பைக் மீது மோதினார். இதில் ராமன், மனோஜ் படுகாயமடைந்தனர். இதில் ராமன் திருச்சி மருத்துவமனைக்கும், மனோஜ் கரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று ராமன் இறந்தார்.இந்நிலையில் நேற்று இரவு, 7:00 மணியளவில் பாளையம்-திருச்சி நெடுஞ்சாலையில் சீத்தப்பட்டி பஸ் நிறுத்தத்தில் ராமனின் சடலத்தை சாலையில் வைத்து, துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கடவூர் தாசில்தார் ராஜாமணி மற்றும் சிந்தாமணிபட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டப்படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.இதையடுத்து மறியலில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
15-Oct-2025