உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் சீரமைப்பு பணி; போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

சாலையில் சீரமைப்பு பணி; போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

கரூர்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்-சாலை கரூர் வழியாக கடக்கிறது. இச்சாலை வழியாக கார், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில், நீண்ட நாட்களாக இச்சாலை புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், ஆங்காங்கே சிறிய பள்ளங்கள் மற்றும் தார் பெயர்ந்து காணப்பட்டது.இதையடுத்து, தற்போது கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சா-லையில், மணல்மேடு பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், ஒரே பாதையில் வாகனங்கள் அனுப்-பப்பட்டு வருகின்றன. எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள், சாலையை மெதுவாக கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.மேலும் வாகனங்கள், 1 கி.மீ., துாரம் வரை அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து சாலையை கடந்து சென்றது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.தற்போது தீபாவளி நேரம் என்பதால், அதிகளவில் வாகனங்கள் செல்வதால், வழக்கத்தை விட கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை