உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.2.80 லட்சம் மாயம்

ரூ.2.80 லட்சம் மாயம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று காலை சேங்கலில் உள்ள அரசு வங்கியில் இருந்து, 2.80 லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு, டூவீலர் வாகனத்தின் பின்புறம் வைத்து, 'லாக்' செய்து விட்டு சேங்கல் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் வந்துள்ளார். பின்னர், அங்குள்ள கழிவறைக்கு சென்று விட்டு, பிறகு நண்பர் வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.பின் நண்பரை பார்த்து விட்டு, மீண்டும் வாகனத்தில் புறப்பட தயாரானார். அப்போது, பின்புறம் இருந்த லாக்கை திறந்தபோது, பணத்தை காணவில்லை. இது குறித்து அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரித்து, பெட்ரோல் பங்க்கில் உள்ள,' சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ