கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு
கரூர், டிச. 4-கரூர், வேலாயுதம் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. அங்குள்ள சாக்கடையில், பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளன. கழிவு நீர் தேங்கி நிற்கிறது. தற்போது மழை பெய்வதால், மழைநீர் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் துர்-நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. இந்த தெரு சிறிய சந்தாக இருப்பதால், மக்கள் வெளியில் செல்ல முடியவில்லை. அப்படி போக வேண்டும் என்றால் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டும். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.சாக்கடை கால்வாய்களை துார்வாரி, தினமும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தேங்கிய கழிவு நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.