இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இரண்டாவது நாளாக நேற்று, வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி உள்பட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.