உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக தண்ணீர் தினத்தையொட்டிஅரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

உலக தண்ணீர் தினத்தையொட்டிஅரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

உலக தண்ணீர் தினத்தையொட்டிஅரசு கல்லுாரியில் கருத்தரங்கம்அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை தலைவருமான முனைவர் காளீஸ்வரி, உலக தண்ணீர் தினம் குறித்து உரையாற்றினார். உலக அளவிலான தண்ணீர் பற்றாக்குறையை எப்படி போக்குவது, வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், எவ்வாறு மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்கி மழை நீர் சேமிப்பது குறித்தும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தண்ணீரை பாசன முறையில் எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.மேலும் பனிப்பாறைகள் உருகாமல் பாதுகாப்பது, உலக வெப்பமயமாதலை தடுப்பது, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை குறைப்பது, நீர் நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்களை துாக்கி எறியாமல் நீர்நிலைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி