மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்
25-Nov-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்ட-சபை தொகுதிக்கு உட்பட்ட, பா.ஜ., சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் மாயனுாரில் நடந்தது.கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் சட்ட-சபை தொகுதி, குளித்தலை தொகுதிகளில் உள்ள தாந்தோனி ஒன்றியம், கடவூர், தோகைமலை, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் ஆகியவற்றில் உள்ள சக்தி-கேந்திரா பொறுப்பாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்கள் பூத் கமிட்டி நிலவரம் குறித்து விரிவாக பேசப்பட்டது.சக்திகேந்திரா பொறுப்பாளர்கள், வரும் தேர்-தலில் இருந்து நிரந்தர பொறுப்பாளராக இருக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் தலைவர் தர்-மராஜ் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சி பிடிப்பதற்கான பணிகளில் தீவிர-மாக ஈடுபட்டுள்ளது. அதன்படி தி.மு.க., மீண்டும் வெற்றிபெறாமல் தடுக்கும் வகையில் பா.ஜ.,வினர் பணிபுரிய வேண்டும். சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் கட்சி பணிகளில் ஈடுபடும் நேரம் வந்துள்ளது. இதில் வெற்றி பெறும் பொறுப்பாளர்களுக்கு பதவிகள் தேடி வரும்,'' என்றார்.மாவட்ட இணை பொறுப்பாளர் சாமிதுரை, பா.ஜ., நிர்வாகி பாக்கிய ரகுபதி, கிருஷ்ணராயபுரம் கிழக்கு பா.ஜ., ஒன்றிய செயலாளர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
25-Nov-2025