மாவட்ட மைய நுாலகத்துக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல்
கரூர்:கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு, மாணவர்களு க்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக, 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் 'டிவி' யை ரோட்டரி சங்க தலைவர் செந்தில் குமார், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமாரிடம் வழங்கினார். அப்போது, வாசகர் வட்ட தலைவர் தீபம் சங்கர், உறுப்பினர் சாமிநாதன் உள்பட, பலர் உடனிருந்தனர். முன்னதாக, கரூர் அருகே காணியாளம்பட்டி அரசு பள்ளிக்கு, 52 ஆயிரம் ரூபாய் மதிப் பில், லேப்டாப் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.