உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்டில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், செயல் அலுவலர் செல்வராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின்படி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில், திடக்கழிவு மேலாண்மையின் படி மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் துாய்மை, சுகாதாரம், டெங்கு விழிப்புணர்வு, மரம் நடுதல், மழை பெறுதல், ஓசோன் ஓட்டையை தவிர்த்தல் போன்றவற்றை குறித்து பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்தி விளக்கி கூறப்பட்டது. மேலும் கரகாட்டம், பொம்மலாட்டம் ஆடல், பாடலுடன் கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கலை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பேரூராட்சி மேற்பார்வையாளர் அருள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி