உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

குளித்தலை, குளித்தலை, அரசு தலைமை மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ சான்றிதழ் வழங்கிய பின், உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.எலும்பு முறிவு மருத்துவர்கள் திவாகர், தினேஷ், மனநல மருத்துவர் பாரதி கார்த்திகா, காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் நித்யா, பேச்சு பயிற்றுனர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமை, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், வாரந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், புதன்கிழமை தோறும் கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனையிலும் நடை பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி