உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

லாலாப்பேட்டை பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

லாலாப்பேட்டை பள்ளியில்சிறப்பு மருத்துவ முகாம்கிருஷ்ணராயபுரம், அக். 5-லாலாப்பேட்டை, சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு, மழை காலங்களில் பரவும் காய்ச்சல் மற்றும் பொது மருத்துவமான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் நோய் ஆகிய பரிசோதனைகள் பார்க்கப்பட்டது. டாக்டர் பார்த்திபன் தலைமையில், மருத்துவ குழுவினர் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கினர். செவிலியர்கள், பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !