உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

கரூர்: கரூர் மாவட்டம், நன்செய் புகளூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது* திருக்காடுதுறை, மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணிபாளையம் நத்தமேட்டு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவன நாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை