உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லடையில் மாநில அளவில் கபடி போட்டி

கல்லடையில் மாநில அளவில் கபடி போட்டி

குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடையில் ஊர் பொதுமக்கள் சார்பாக, 10ம் ஆண்டு மாநில அளவிலான தொடர் கபடி போட்டி நடந்தது.கல்லடை, பழனியாண்டவர் திடலில் மூன்று நாள் நடந்த கபடி போட்டிக்கு ஊர்பட்டையதார் வையகன் தலைமை வகித்தார். கரூர், திருச்சி, திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல் உள்-பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 30 அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த போட்டியில், திருவாரூர் மாவட்டம், கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று, முதல் பரிசாக, 40 ஆயிரம் ரூபாய், 50 கிராம் வெள்ளி நாணயம், 5 அடி சுழல் கோப்பையை தட்டிச்-சென்றது. இரண்டாவது பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், 40 கிராம் வெள்ளி நாணயம், 4 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையை கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி பி.வி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் அணி-யினர் பெற்றனர். மூன்றாவது பரிசாக சின்னப்பில்லுார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, நான்காவது பரிசாக வடசேரி லயன்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ