உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேச ஒற்றுமையை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தேச ஒற்றுமையை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம், சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த தினத்தையொட்டி, ராசிபுரத்தில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.இந்தியாவின் முதல் துணை பிரதமர், 'இரும்பு மனிதர்' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின், பிறந்த நாளான அக்., 31ம் தேதி, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த அக்., மாதம், படேலின், 150வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.ராசிபுரத்தில் இளைய பாரத அலுவலகம் சார்பில், சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, 'ஒற்றுமை பாத யாத்திரை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில், ராசிபுரம் எஸ்.ஐ., கீதா, வேளாண்மை கல்லுாரி முதல்வர் கோபால் ஆகியோர், பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பேரணி, பழைய பஸ் நிலையம், கடைவீதி, சேலம் சாலை, ஆத்துார் சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று இறுதியாக தாசில்தார் அலுவலகம் வரை, 2 கி.மீ., துாரம் சென்று முடிவடைந்தது.மாணவர்கள் கையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை