உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலைத் திருவிழா போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

கலைத் திருவிழா போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

கரூர், கரூர் மாவட்டத்தில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி, கடந்த ஆகஸ்ட் முதல் நடந்து வருகிறது. மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல் உட்பட பல்வேறு போட்டிகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.பள்ளி அளவில், வட்டார அளவிலான போட்டிகள் நடந்து, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்-டனர். இதன்படி, கரூர் அருகில் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, கரூர் சாரதா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டி நடந்து வருகிறது. இதில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, 607 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெறுவோர் மாநில அளவில் நடைபெற உள்ள, போட்டிகளில் பங்-கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை