உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குப்பை, காய்ந்த மரங்களுக்கு தீ வைக்கும் கும்பலால் அவதி

குப்பை, காய்ந்த மரங்களுக்கு தீ வைக்கும் கும்பலால் அவதி

கரூர்: கரூரில் அடிக்கடி குப்பை மற்றும் காய்ந்த சீமை கருவேல மரங்-களை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சுற்று வட்டார பகுதிகளில் புகை மண்டலத்துடன், சுகாதார கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் நகரை சுற்றி திருச்சி சாலை, கோவை சாலை, ஈரோடு சாலை மற்றும் சேலம் சாலை செல்கிறது. கரூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் இருந்து சேகரமாகும் குப்பையை, தேசிய நெடுஞ்சாலைகளில் கொட்டி வருகின்றனர். பலமாக காற்று அடிக்கும் போது சாலைகளில் குப்பை பறக்கிறது.மேலும், குப்பையை சிலர் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். கரூர் நகரை தாண்டி ஏராளமான நிலங்களில் சீமை கருவேல மரங்கள் உள்ளன. காய்ந்த நிலையில் உள்ள இந்த மரங்களையும் தீயிட்டு கொளுத்துகின்றனர்.இதனால், கரூர்- திருச்சி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில், ஏதாவது ஒரு பகுதியில், தீ வைத்து எரிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.எனவே, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.குப்பை, காய்ந்த சீமை கருவேல மரங்கள் மீது தீ வைத்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்-துவோர் மீது, கரூர் மாவட்ட நிர்வாகம் கடுமையான, நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை