உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடிப்படை வசதி இல்லாத வணிக வளாகங்களால் அவதி

அடிப்படை வசதி இல்லாத வணிக வளாகங்களால் அவதி

குளித்தலை:குளித்தலையில் உள்ள வணிக வளாகங்களில் அடிப்படை வசதி உள்ளதா என, நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளித்தலை நகராட்சி பகுதிகளில் சுங்ககேட், காவிரி நகர், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் தரை மற்றும் மாடி கட்டடங்களில் வணிக வளாகங்கள் அறை, அறையாக தடுக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகங்களில் வாடகைக்கு இருக்கும் நுகர்வோர் மற்றும் கட்டடத்தில் இயங்கும் அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்தம், தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.வணிக வளாகமாக செயல்பட அனுமதி வழங்கிய நகராட்சி நிர்வாகம், அடிப்படையான வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை