உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஞ்சப்பட்டி பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி பணி

பஞ்சப்பட்டி பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி பணி

பஞ்சப்பட்டி பகுதிகளில்சூரியகாந்தி சாகுபடி பணிகிருஷ்ணராயபுரம், நவ. 7-பஞ்சப்பட்டி பகுதிகளில், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, மேல பஞ்சப்பட்டி, கீழ பஞ்சப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய இடங்களில், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சூரியகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து வருகிறது.சூரியகாந்தி பூவில் காய்கள் பிடித்து முற்றிய பிறகு, அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பரவலாக இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூரியகாந்தி சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. குறைந்த தண்ணீர் மட்டுமே தேவை என்பதால், விவசாயிகள் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி