மேலும் செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; கமிஷனர் ஆஜராக உத்தரவு
15-Oct-2025
கரூர், வெண்ணைமலை, கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கையை, திருத்தொண்டர் சபை நிறு-வனர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம், கோவில் நிலங்களை மீட்க முயற்சி செய்யாத அதி-காரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதாகிருஷ்ணன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். பின், நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, இடங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஆக்கிரமிப்பு பணிகளை மூன்றாம் நாளாக நேற்று ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். வெண்ணைமலை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆய்வு செய்தார். பின்னர் அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
15-Oct-2025