உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால்நிலையம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி அலுவலக உதவியாளர் முத்துமாரி தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தும், ஒருவாரம் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, கண்ணதாசன், மாவட்ட செயலாளர் சிங்கராயர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை