மேலும் செய்திகள்
சின்னவெங்காயம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்
11-Sep-2026
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதி யில், மரவள்ளி கிழங்கு அறுவடை பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, கோடங்கிப்பட்டி, வலையப்பட்டி, தேசியமங்களம், மகிளிப்பட்டி, உடையத்தோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.தற்போது கிழங்குகளை அறுவடை செய்யும் பணி நடக்கிறது. தற்போது கிழங்கு விலை உயர்ந்துள்ளதால், அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் கேரளா மாநிலம், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. விவசாயிகளிடம் இருந்து மரவள்ளி கிழங்குகளை கிலோ, 16 ரூபாய்க்கு கெள்முதல் செய்யப்படுகிறது. தற்போது மழை இல்லாததால் மகசூல் குறைந்துள்ளது. விலை உயர்ந்துள்ள நிலையில், மகசூல் பாதிப்பு இருப்பதால், விவசாயிகளுக்கு ஓரளவு மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது.
11-Sep-2026