ஆசிரியர்கள், காப்பாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கரூர், டிச. 15-தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம், ஆசிரியர் தங்கவேல் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது.அதில், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் கூடுதல் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ள, பாரபட்சமான நடவடிக்கை மாற்றப்பட வேண்டும். ஆதி கலைக்கோல் விழா குறித்து விசாரிக்க வேண்டும், ஆசிரியர் காப்பாளர்களின் பதவி உயர்வு, பணி மாறுதல்களை கணக்கில் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், தலைவர் பூவலிங்கம், பொதுச்செயலாளர் சங்கர சபாபதி, பொருளாளர் முருகன், மாவட்ட தலைவர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.