உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆட்டம் காணும் இனுங்கூர் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம்

ஆட்டம் காணும் இனுங்கூர் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூரில் உள்ள பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.இந்த வாய்க்கால் பாலம் வழியாக நச்சலுார். நெய்தலுார், ஆலத்துார் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. மேலும், விவசாய நிலம், அனைத்து சமுதாய மக்களில் மயானமும் இப்பகுதியில் அமைந்-துள்ளது. இந்த சாலையை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் சார்பில் பராமரிக்கப்-பட்டு வருகிறது. பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் சேதமடைந்து, போக்குவரத்து முழுவதும் தடைப்பட்டுள்ளது. இதனால் விளை பொருட்களையும், இறந்தவர்களின் உடல்களையும் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் நலன் கருதி, பாலத்தை செப்பனிட்டு மீண்டும் பழையபடி பயன்பாட்-டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ