உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பரளி குகை வழி பாதை பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அவதி

பரளி குகை வழி பாதை பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அவதி

குளித்தலை, குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி - பரளி நெடுஞ்சாலையில் ரயில்வே குகை வழிப்பாதை பணி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ரயில்வே கேட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தொடங்கப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், குகை வழிப்பாதையில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது. பணி தாமதத்தால் பரளி, கருகளாப்பள்ளி, கூடலுார், திம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், 8 கி.மீ., தொலைவில் உள்ள குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், கோட்டைமேடு ராணிமங்கம்மாள் சாலை வழியாக செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.எனவே, ரயில்வே நிர்வாகம் குகை வழி பாதை பணியை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என, கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை