உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் முட்புதரால் நீர் செல்வதில் சிக்கல்

வாய்க்காலில் முட்புதரால் நீர் செல்வதில் சிக்கல்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பாசன கண்ணாறு வாய்க்காலில், செடிகள் முட்புதர்கள் போல் வளர்ந்து வருவதால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு பகுதியில் இருந்து, பிச்சம்பட்டி நெடுகை வாய்க்கால் வரை, சிறிய பாசன கண்ணாறு வாய்க்கால் செல்கிறது. இதில் வரும் தண்ணீரை கொண்டு வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பாசன கண்ணாறு வாய்க்காலில், அதிகமான செடிகள் வளர்ந்து முட்புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் வரும்போது, விவசாய நிலங்களுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாசன கண்ணாறு வாய்க்காலில் வளர்ந்து வரும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை