திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா
திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழாகரூர், அக். 5-சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா, கரூரில் நேற்று நடந்தது.கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, திருப்பூர் குமரன் சிலைக்கு, கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் சங்கம் சார்பில், அமைப்பு செயலாளர் ஓம் சக்தி சேகர் தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல், கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி, கரூர் மாவட்ட செங்குந்தர் இளைஞர் பேரவை, செங்குந்தர் மகாஜன சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பில், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.